இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ‘ககன மார்கன் ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ சொல்லிடுமா ..’எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தொகுப்பாளரான லியோன் ஜோன் பால் இயக்குநராக அறிமுகமாகும் ‘ ககன மார்கன் ‘ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, அஜய் திஷான், சமுத்திரக்கனி, பிரிகிடா , தீப்ஷிகா , மகாநதி சங்கர் , வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஏம்மா நீ என்ன பார்த்த ..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் லாவர்தன் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான விஜய் அண்டனி பாடியிருக்கிறார். இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலும், பாடலுக்கான காணொளியும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.