அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைகின்றேன்.
ஊடகத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை. தனது அர்ப்பணிப்பு மற்றும் கொள்கைகளை அவர் நிலைநிறுத்தி, மக்களுக்கான குரலாக மாறியே பணியாற்றினார்.
பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியிருந்தாலும் அவரது எண்ணம் – சிந்தனை எல்லாமே மக்களுக்கானதாகவே மாத்திரம் இருந்தது.
ஊடக அறநெறியைப் பின்பற்றிய ஒருவராக தமிழ் ஊடகத்துறையில் அன்னாரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
அவரது இழப்பை தமிழ்ச் சமூகமும், ஊடகச் சமூகமும் ஆழமாக உணர்கின்றது.
வடக்கு மாகாண நிர்வாகத்தின் சார்பாக, வடக்கு மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.