கத்தோலிக்க மத தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸ் (88 வயது) நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகி, கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், வழக்கம் போல் சாப்பிடுவதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வத்திக்கான் மேலும் தெரிவித்துள்ளது.
அவருக்குச் சிறிதளவு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகக் கடந்த வார இறுதியில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.