பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவர் இருப்பதைக் கண்டனர். பொலிஸார் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர் என பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அவரது கணவர் சென்னையில் இருந்துள்ளார். ஆனால் செய்தியைக் கேட்டவுடன் உடனடியாக ஐதராபாத் சென்றுள்ளார். பாடகி கல்பனாவுக்கு நெருக்கமான பலர் வை்ததியசாலைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டுள்ளனர். கல்பனாவின் சக பாடகியான சுனிதா வை்தியசாலைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டுள்ளார்.
பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் . இவருடைய தந்தை டிஎஸ் ராகவேந்தர் ஒரு நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். அவரது அம்மாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சேனல்களில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும், அவர் தனது சிறு வயதில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.