‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் வின்சென்ட் கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தோணி’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா இலங்கையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்து ராஜா – ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் உருவாகும் ‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் ‘கயல்’ வின்சென்ட் , டி. ஜே. பானு, சுதர்சன் ரவீந்திரன், சௌமி, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஏ. பிரசாத் மேற்கொள்கிறார். இலங்கையின் கடற்கரையோர மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஓசை ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமணா – சுகா தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் விஜய் பாலசிங்கம் ஃபிலிம்ஸ் – ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணை தயாரிப்பு பணியை ஏற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.
இலங்கை – இந்திய கலைஞர்களின் கூட்டு தயாரிப்பான இந்த திரைப்படத்தின் தொடக்க விழா இலங்கையில் கோலாகலமாக நடைபெற்றது. அத்துடன் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.