கனடா நாட்டின் பிரதமராக சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்து விலகுகிறார்.
ஆனால், அவர் வெறுங்கையை வீசிக்கொண்டு பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை. அவர் நாடாளுமன்றத்தில் தான் அமர்ந்த நாற்காலியையும் எடுத்துச் செல்கிறார். ட்ரூடோ கையில் நாற்காலியுடன் நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து நேற்று முன்தினம் வெளியேறினார்.
இதன்போது, அவர் வேடிக்கையாக நாக்கை நீட்டிக்கொண்டு, குறும்புத்தனமாக காணப்பட்டார். இந்தப் புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாகியுள்ளது. இணையவாசிகள் பலர் அவரின் குறும்புத்தனத்தை வரவேற்றனர். சிலரோ அவரின் செயல் வித்தியாசமாக இருப்பதாகக் கூறினர்.
கனடா நாடாளுமன்றத்திலிருந்து எந்த உறுப்பினர் விலகினாலும் அவர் தாம் அமர்ந்த நாற்காலியையும் எடுத்துச் செல்லலாம். இது ஒரு வழக்கம் என்று உள்நாட்டு ஊடகமான Toronto Sun நிருபர் பிராயன் லில்லே குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அந்நாட்டின் புதிய பிரதமர் ஆகின்றார்!
கனடா அதன் புதிய பிரதமராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னியை வரவேற்கவுள்ளது.