இங்கிலாந்து கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற அமெரிக்க கப்பல் ஒன்றும் ஜெர்மன் சரக்குக் கப்பல் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதன்போது அமெரிக்க இராணுவக் கப்பலில் சுமார் 220,000 பீப்பாய் விமான எரிபொருள் இருந்துள்ளது.
இந்த விபத்தில் சரக்குக் கப்பலின் கேப்டனை இங்கிலாந்து பொலிஸார் கைதுசெய்துள்ளது.
கவனக்குறைவு மற்றும் கொலை ஆகிய சந்தேகத்தின்பேரில் கப்பலின் கேப்டன் (59 வயது) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கப்பல்கள் மோதியதற்கான காரணத்தைப் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
கப்பல்கள் மோதியதற்குச் சதி வேலை காரணமல்ல என்பதை இங்கிலாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சரக்குக் கப்பலில் இருந்து காணாமற்போன கப்பல் ஊழியர்கள் மரணித்திருக்கலாம் என்றும் இங்கிலாந்து அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்தி : எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலும் சரக்குக் கப்பலும் மோதி விபத்து; 30 பேர் காயம்!
எண்ணெய்க் கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்ட சரக்குக் கப்பல் ஆங்கிலக் கரையை நோக்கி இழுத்துச்செல்லப்படுவதாக இங்கிலாந்து கடற்படை கூறியது.
சரக்குக் கப்பலில் சோடியம் சயனைடு கொண்டுசெல்லப்படவில்லை என்று அதன் ஜெர்மன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு அபாயம் பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நிலைமையை ஆராய ஜெர்மனி மற்றும் நோர்வே ஆகியவற்றின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.