2
காரிருள் பூட்டிய கந்தக புகை நடுவே
பளிச்சிடும் மின்னலும் வெட்டிட
வாண்முகிலாலும் அழுத்திடவே
பார்மீது பட்ட துளிகளை முகர்ந்து
நீவிய விதை நடுவே உப்பிய வயிறும் வெடித்து
செடிகளாய் உருமாறிற்று
கார்த்திகை சாரல்களும் வீசிட
வேங்கை நாளினிதே வணங்கிட
கருவிழி சிவந்திட தணல் மலருடன்
உயிப்பிற்றது செடி
எமையாலும் இறைவா
எனையாண்ட கடவுள்களின் கோவில்களை
தொலைத்தோம்
கயவன் குறி கார்த்திகை மலருடன் போராட்டம்
எம்மவர் நினைவாய் பூக்கும் தெய்வங்களை
காப்பாயாக.
கேசுதன்