தேவையான பொருள்கள்
மைதா மாவு- 400 கிராம்
உருளைக் கிழங்கு- 200 கிராம்
உளுத்தம் பருப்பு, மல்லித்தூள்- தலா 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள், சீரகத் தூள்- தலா அரை தேக்கரண்டி
மல்லி இலை, வனஸ்பதி, எண்ணெய், கடுகு- தலா 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் – 2
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். மைதா, உப்பு இரண்டையும் கலந்திடுங்கள். அதில், வனஸ்பதியை சிறிது, சிறிதாகக் கலந்து பிசையுங்கள். சப்பாத்தி மாவு பக்குவத்துக்கு இது பிசைய வேண்டும். உருளைக்கிழங்கில் மல்லித்தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து வையுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு கலந்து பொரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். ஆறியதும் உருளைக்கிழங்கு கலவையை கொட்டி கிளறுங்கள். எலுமிச்சைச்சாறும், மல்லி இலையையும் சேருங்கள். எல்லாவற்றையும் கலந்து மாவைச் சிறிய உருண்டைகளாக்குங்கள். ஒவ்வொன்றையும் பூரி போல் ஆக்கி, நான்கு அங்குல அளவுக்கு வட்டமாக வெட்டி எடுங்கள்.
அதன் உள்ளே உருளைக்கிழங்கை வைத்து, தண்ணீர் தொட்டு முனைப் பகுதியை மூடுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து சூடானதும் சமோசாவை அதில் போட்டு வறுத்தெடக்க வேண்டும்.