செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் தலை சீவுறதுலயே முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியுமா?

தலை சீவுறதுலயே முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியுமா?

2 minutes read

இன்றைய மார்டன் உலகில் நிறைய பெண்கள் தலைமுடியை சீப்பு கொண்டு சீவுசதே இல்லை. சிலர் அடிக்கடி தலையை சீப்பால் சீவினால் அதிகமாக உதிரும் என்று நினைத்து அடிக்கடி சீவுவதே கிடையாது. ஆனால் தலைமுடியை சீப்பால் சீவுவதற்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் அறிவியல் ரீதியாகவே நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன, அப்படி முடி வளர்ச்சியைத் தூண்ட வேண்டுமென்றால் அதற்கு தலைமுடியை எப்படி சீவலாம் என்று இங்கு பார்ப்போம் வாங்க.

பாஜக தலைவர் பதவிக்கான ரேஸ் : சரத்குமார் புதிதாக சேர்ந்தது எப்படி?
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் இதுவரை இல்லாத நபரான நடிகர் சரத்குமார் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமுடியை சீவுவது

தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியை சீப்பால் தினமும் சீவ வேண்டியது அவசியம்.

பகலில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும் தலைமுடியை சீப்பால் சீவி சிக்குகள் விழாமல் பார்த்துக் கொள்வதோடு இரண்டு முறை நன்கு அழுத்தமாக சீவி பின் தலைசீவி பின்னிக் கொள்ளுங்கள்.

தலைமுடியை ஏன் சீவ வேண்டும்?

அடிக்கடி சீப்பால் சீவுவதால் தானே முடி உதிர்கிறது, ஏன் சீவ வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதில் பல நன்மைகள் இருக்கின்றன.

முடியின் வேர்க்கால்களில் செபாசியஸ் சுரப்பிகள் இருக்கின்றன. சீப்பால் சீவும்போது இந்த சுரப்பிகள் தூண்டப்பட்டு உச்சந்தலையை மாய்ஸ்ச்சரைாக மாற்றும்.

ஏனெனில் சீவும்போது உச்சந்தலையில் இருக்கிற எண்ணெய் சுரப்பு முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரையிலும் நேச்சுரல் எண்ணெயைக் கொடுக்கும். இதனால் நன்கு ஆழமாக மாய்ஸ்ச்சரைஸிங் நடக்கும்.

முடியை சீப்பால் சீவுவது வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்வது போன்றது. அது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியைத் தூண்டும். சீவும்போது முடி உதிர்கிறது என்று கவலைப்படாதீர்கள். ஒரு நாளைக்கு 50 -100 முடிகள் வரை உதிர்வது இயல்பானது தான்.

எத்தனை முறை சீவலாம்?

தினமும் காலையில் ஒருமுறையும் மாலை அல்லது இரவில் ஒரு முறையும் என்று இரண்டு முறை தலைமுடியை கட்டாயம் சீவுங்கள்.

சீப்பு கொண்டு சீவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்காக அடிக்கடியும் சீவிக்கொண்டே இருக்கக் கூடாது.

வேர்க்கால்களின் உள்ளுக்குள் இருந்து நேச்சுரல் எண்ணெயை முடி முழுவதற்கும் வழங்கி மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவே இதை செய்கிறோம்.

அதேசமயம் முடியை மிக மென்மையாக சீவுங்கள். கடினமாக சீப்பால் போட்டு இழுக்கக் கூடாது.

வறட்சியான முடியை கையாள்வது

தலைக்கு பெரும்பாலும் சீவும்போது லேசாக எண்ணெய் அப்ளை செய்து சீவுவது நல்லது. அப்படி சீவும்போது சிக்குகள் அதிகமாக விழாது.

மிக வறட்சியாக இருக்கும் கூந்தலில் அதிகமாக சிக்கு விழ வாய்ப்புண்டு. அதை கையாளும்போது மிக கவனமாக இருங்கள். அதேபோல தலைக்கு குளித்தபின் ஈரமான தலைமுடியை சீவுவதையும் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் வேர்க்கால்கள் தளர்வாக இருக்கும். முடி உதிர்தவை அதிகமாக்கும்.

எந்த வகை சீப்பு?

தலைமுடியை சீவுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எந்த வகையான சீப்பு பயன்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியம்.

பெரும்பாலும் நிறைய பேர் பிளாஸ்டிக் மற்றும் நைலான் வகை சீப்புகளையே பயன்படுத்துகிறோம். ஆனால் அவை முடியின் வேர்க்கால்களையும் பாதிக்கும். முடி உதிர்தலை அதிகரிக்கும்.

அதனால் தலைமுடியை சீவுவதற்கு மரத்தாலான சீப்புகளை (வேம்பு, பலா போன்ற மரங்களில் இருந்து செய்யப்பட்ட), அல்லது சிலிகான் மெட்டலில் ஆன சீப்புகளை பயன்படுத்துங்கள். அவை முடிகள் உடைவதைத் தடுக்கும்.

இவையெல்லாம் கேட்பதற்கே உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் தலைமுடியை சீப்பு பயன்படுத்தி சீவுவதன் மூலமாக முடி உதிர்வதைக் குறைத்து இயற்கையாக, மாய்ஸ்ச்சராக வைத்திருப்பதோடு முடியின் வளர்ச்சியையும் தூண்டும். வழக்கமாக மேலிருந்து கீழ்நோக்கி சீவுவீர்கள். ஆனால் கீழிருந்து மேல்நோக்கி சீவுவது கூடுதல் பலன்களைத் தரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More