மே 3 சனிக்கிழமை ஐக்கன்ஹாம் வீதியில் இரண்டு இளம் வயதினர், இரண்டு பூனைக்குட்டிகளை கொடூரமாக கொன்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணை உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறினர்.
இதனையடுத்து, குற்றத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு பேர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
“இது மிகவும் துயரமான சம்பவம், இது உள்ளூர் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் தற்போது 5 அடி உயரம் கொண்ட குட்டையான கருமையான தலைமுடியுடன் கூடிய ஒரு நபரை தேடி வருகின்றோம்.
சம்பவம் நடந்த நாளில் அவர் நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருமையான ஜேர்சியை அணிந்திருந்தார். அவர் ஒரு கருப்பு பையையும் எடுத்துச் சென்றிருந்தார், அதில் பூனைக்குட்டிகள் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றோம்” என, பொலிஸ் சார்ஜென்ட் பாப்ஸ் ராக் கூறியுள்ளார்.