யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்கள் நடாத்தும் கலையரசி 2017 எதிர்வரும் மே 20ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக அறிமுக நிகழ்வும் ஊடகசந்திப்பும் கடந்த 19ம் திகதி லண்டனில் நடைபெற்றது.
பழைய மாணவர் ஒன்றிய பிரித்தானிய கிளையின் தலைவர் தேவராஜா தலைமையில் இவ் அமர்வு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் புதுப்பொலிவுடன் நடைபெறும் கலையரசி நிகழ்வு இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடைபெற ஏட்பாடாகியுள்ளது. இவ்வருடம் தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், முகேஷ் இவர்களுடன் லண்டன் தமிழ் பாடகர்களான விக்கி, தர்ஷி மற்றும் உலகப்புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
தமது முப்பது வருட வரலாற்றில் முதல் தடவையாக, இவ்வருடம் எம்மவர்களிடையே இலைமறை காயாக இருக்கும் இசைத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் Singify நிறுவனத்துடன் இணைந்து ‘’Singify இந்துவின் நட்சத்திரங்கள்’’ என்னும் மாபெரும் பாட்டுப் போட்டியை ஐரோப்பா முழுவதிற்கும் தாம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
.