0
தற்போது நிலவிவரும் காலநிலை இன்று மாலை மேலும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கள் முடங்கிப்போயுள்ளன.
இலண்டன் நகரில் சில நிலக்கீழ் ட்ரெயின் சேவைகள் சீராக நடைபெறவில்லை.
பொலீசார் மக்களை தேவையற்று வீதிகளை பாவிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.