வடக்கில் யுத்தம் நிறைவு பெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தும் இராணுவத்தின் பிடியில் சிக்கி பெரும் நிலப்பரப்பு காடுகளாகி அழிவடைந்து காணப்படுகின்றது. தாய்மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு இடப்பெயர்வு வாழ்வை சுமந்து நின்ற வலிகாமம் மக்களில் ஒருதொகுதியினருக்கு தமது சொந்த நிலம் இன்று மீளக்கிடைத்துள்ளது.
வடக்கில் இந்த நிகழ்வு ஒரு விழாவாக ஒழுங்குசெய்யப்பட்ட போதிலும் தமது நிலங்களை பார்வையிட்ட மக்களின் மனங்கள் வேதனையில் துடித்தன. வீடுகள் அழிந்துள்ளன, கோவில்கள் சிதைந்துள்ளன, வீதிகள் உருமாறியுள்ளன. தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பி எப்போது இவர்கள் அமைதியாக வாழப்போகிறார்கள்.
இந்த நிலங்களை மீட்க இவர்கள் செய்த முயட்சி இன்று கைகூடியுள்ளது. இதேபோன்று ஏனைய மக்களுக்கும் தமது நிலங்கள் விரைவில் கிடைக்க வேண்டும்.