அண்மையில் வெளிவந்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத்தொகுதிக்கான அறிமுக நிகழ்வு பரந்தனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(29ம் திகதி) பரந்தன் இந்துமகா வித்தியாலயத்திலுள்ள சுப்பையா நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தாமரைச்செல்வி அவர்களின் சொந்த கிராமமான குமரபுரம் பரந்தனில் இந்த நிகழ்வு நடைபெறுவது சிறப்புக்கவனத்தைப் பெறுகின்றது. சுமார் 200 சிறுகதைகளையும் 7 நாவல்களையும் இப்பிரதேசத்தின் கதைக்களமாக கொண்டே படைக்கப்பட்டுள்ளன. பல விருதுகளையும் பாராட்டுக்களையும் இந்த மண்ணிலிருந்தே பெற்றிருக்கின்றார். இலங்கையின் அதியுயர் விருதான சாகித்திய மண்டல விருதையும் பெற்றதுடன் இவரது ஒரு சிறுகதை அரச கல்வித்திட்டத்தின் கீழ் ஆண்டு 11 க்கான பாட விதானத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் நடைபெறும் இன் நிகழ்வில் மீனலோஜீனி இதயசிவதாஸ், சி ரமேஷ், ப தயாளன், பெருமாள் கணேசன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கௌரவ பிரதிகளை வழங்க இருக்கின்றார்.
2017ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த இந்த நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முதல் அறிமுகம் செய்யப்பட்டது அதனைத்தொடர்ந்து லண்டனிலும் இப்போது பரந்தனில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வை ஒய்வுநிலை அதிபர் ம பத்மநாபன் குடும்பத்தினரும் பரந்தன் இளைஞர் வட்டமும் இணைந்து ஏட்பாடு செய்துள்ளனர்.