கடந்த 1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இதுவரை படையினரால் மக்களுக்கு மீள் குடியமர மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இப்பிரதேச மக்களின் தொடர் வேண்டுகோள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக மக்கள் நேரடியான போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இதனைத்து தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் மக்கள் படையினரின் அனுமதியினையும் மீறி இரணைதீவு சென்று தமது சொந்த நிலத்தில் இருந்து போராடத்தொடங்கினர். அனைவரது பார்வையும் இரணைதீவு மக்களின் போராட்டம் மீது திரும்பியதுடன் அவர்களுக்கான ஆதரவும் வலுப்பெற்ற நிலையில் அரசு இவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்துள்ளது.
இன்றைய தினம்(15/05/2018) மீள்குடியேற்ற அமைச்சர் கடற்படைத் தளபதி மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலையில் இரணைதீவை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.