அமெரிக்காவில் தனது மனைவியைக் கடிக்கப் பாய்ந்த நாயைத் தடுக்க வேறு வழியில்லாமல் அந்த நாயை திரும்பி கடித்துள்ளார். அயோவாவைச் சேர்ந்த கேரன் ஹென்றி என்பவர் தனது நாய் கேண்டியுடன் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தத் தெருவில் இருந்த ஒரு பெரிய நாய், வெறியுடன் கேரனை நோக்கிப் பாய்ந்தது கீழே தள்ளி கடிக்க முயன்றது. கேரனின் நாய் மீதும் பாய்ந்து கடித்தது.
இதைப் பார்த்த கேரனின் கணவர் லேயன் வேகமாக ஓடி வந்து தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் நாய் விடவில்லை. இதனால் அவர் படு ஆவேசமாக அந்த நாய் மீது பாய்ந்து அதனை கடுமையாக கடித்துள்ளார். இதையடுத்து நாய் அலறியபடி கேரனை விட்டு தப்பி ஓடியது. பின்னர் உடனடியாக தனது மனைவியையும், நாயையும் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் லேயன். இந்த சண்டையில் லேயனுக்கும் நாய்க்கடி ஏற்பட்டு விட்டது. இதனால் அனைவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.