மாலைதீவில் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் சீனா சார்பாக செயல்படும் அதேவேளை, எதிர் தரப்பில் போட்டியிடும் இப்ராஹீம் மொகமட் சோலியா இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் சார்பாக செயல்படுகிறார் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது.
இந்த நிலையில், இன்றைய தேர்தல் சீனா மற்றும் இந்தியாவினால் அவதானிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தல் வாக்கெடுப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை தமது கவலையினை வெளியிட்டுள்ளது.
மாலைதீவில், ஜனநாயக நடவடிக்கைகள் மேம்படாத பட்சத்தில் அதற்கு எதிராக பொருளாதார தடை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைமையகம் வாக்குப் பதிவிற்கு முன்னர், காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆயிரத்து நூற்று தொண்நூற்று இரண்டு தீவுகளை கொண்ட மாலைதீவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாலைதீவின் பொருளாதாரம் சுற்றுலா துறையினையே அதிக அளவில் நம்பியுள்ளது. கடந்த 2012ஆம் அண்டு முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
அவருடன் மேலும் முக்கிய ஒன்பது எதிர்கட்சி தலைவர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில் யமீன் மேலும் ஐந்து வருடங்கள் பதவியினை தொடர தீர்மானித்துள்ளார்.
அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியினை ஏற்கும் பட்சத்தில், தமது நிர்வாகத்திற்கு எதிராக எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ஆய்வாயர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு