பாகிஸ்தான் நாட்டில் செயற்பட்டு வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக் கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ´ஆக்சன் எய்ட்´ (Action Aid), ´´பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது´´ எனக் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் ´ஆக்சன் எய்ட்´ நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பீபீசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்காக ஆறு மாத காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாட்டை விட்டு 18 தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுவதாக ஆக்சன் எய்ட் நிறுவனம் பீபீசியிடம் தெரிவித்துள்ளது.