கடந்த ஞாயிற்றுக்கிழமை (30/09/2018) இலண்டனில் உருத்திரபுரம் மகாவித்தியாலய பிரித்தானியா வாழ் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி உருத்திரபுரம் மகாவித்தியாலய பழையமாணவர் பாடசாலை அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கியுள்ளனர். (Uruthirapuram Mahavithiyalayam Old Student School Development Association – UMV OSSDA). மேற்படி சந்திப்பு மேற்கு இலண்டன் ரைசிலிபில் (Ruislip) அமைந்துள்ள வணக்கம் Lounge உணவத்தில் நடைபெற்றது.
அன்றையதினம் பாடசாலை சம்பந்தப்பட்ட தேவைகளை கண்டறிந்து திட்டங்களுக்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இவ் அமைப்பானது உலகளாவிய ரீதியில் சகல நாடுகளிலும் வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களையும் உள்வாங்கி செயற்பட உள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பாடசாலையில் கல்வி கற்ற பட்டதாரி ஆசிரியை ஒருவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் வாழ்வதாகவும் அவருக்கு சிறுநீரக மாற்றுச்சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாக்களில் சுமார் 1.5 மில்லியன் பணத்தினை இதுவரை சேர்த்து வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.