தாம் அகதிகள் இல்லையென்பார்
அகந்தை மிகக்கொள்வார்
புலம் பெயர் தமிழர் என்பார்
புதுமை பல சொல்வார்
தாம் வந்து இருபதாண்டு என்பார் சிலர்
ஆகா நாங்கள் முப்பதாண்டு என்பார் பலர்
இருபதும் அகதிதான்
முப்பதும் அகதிதான்
படிக்கவந்தவர்கள் – நாம்
அகதிகள் இல்லை என்பார்
படிகத்தான்வந்தாய்,
படித்து முடிந்தபின்
திரும்பி ஏன் போகவில்லை?
அதுவும் ஒரு நாடோ?
அங்கேயும் மனிதன் போவானோ?
கறுப்புநிற ஆங்கிலேயன்
கதைகள் பல பேசுகின்றான்.
பிறந்த தம் மண்ணை
இகழ்ந்தும் பேசுகின்றார்
சிறந்த தமிழர் இவர்…
சிராட்டி வளர்த்த மண்ணை மறந்த மனிதர்.
தாயை மறந்திடலாம்,
தாய் மண்ணை மறக்கலாமோ?
இறந்து போகுமட்டும்
இதயம் மறக்கலாமோ ?
அந்நாளில் தமிழரிடம்
சாதி மத பேதமில்லை.
பின்னாளில் ஆரியனும் பிரித்தாள – -வேண்டி
கொண்டு வந்தான் சாதி நான்கு
இன்று
புலம் பெயர் தமிழர் – இவர்
புதுச்சாதி ஆயினரே !
– காந்தி –