இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு தேசத்தில் இரண்டு பிரதம மந்திரிகள். சட்டத்துக்கு முரணான செயல்பாடுகளை கொழும்பு அரசியல் முன்னெடுப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. உலக நாடுகள் ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும் செய்யுமளவுக்கு கொழும்பு காணப்படுகின்றது.
ஜனநாயகத்துக்காக பொதுமக்கள் வீதியில் இறங்கிப்போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் மூன்றாவது நாளாக கொழும்பு லிபெர்ட்டி பிளாசாவின் முன் பொதுமக்கள் மாலை 4 மணிமுதல் 6 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
இவை ஆட்சியாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கைக்கான ஆரம்ப புள்ளியாக அமையுமா ?