தாயின் மடி நான் கண்ட சொர்க்கம்
என் மனம் தவிக்கும்போதெல்லாம்
என்னோட தஞ்சம் அவளின் மடியே….
அவளின் மடியில் தஞ்சம் புகும்
அந்த தருணத்தில் என் உயிர்பிரிந்தால்
அதுவே எனது பாக்கியம்…
விடிந்து எழும்போதும் அவளின்
தரிசனம்
இரவில் உறங்குமுன் அவளின் தரிசனம்
அவளின் புன்னகையில் தான்
உயிர் வாழ்கிறேன் நான்…
அன்று என்னை ஈன்றப்போது
அவளின் கனவுகள் என்னவோ
இன்று என் கனவெல்லாம்
அவளின் சந்தோசமே….
எனக்காக சுவாசித்தாள்
எனக்காக யாசித்தாள்
என் வாழ்க்கை வளம்பெற
முழுநேரம் யோசித்தாள்…
என்ன தவம் செய்தேனோ
இந்த ஏழையின் வாழ்வில்
வரமாக என் தாய்…
நன்றி : செல்வமுத்து மன்னார்ராஜ் | எழுத்து.காம்