செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்து வன்னி | கவிதை | பொன் குலேந்திரன்

ஈழத்து வன்னி | கவிதை | பொன் குலேந்திரன்

2 minutes read

ஈழத்து நெற் களஞ்சியம்

ஈடில்லா வன்னி என்ற வீர மண்

 

சோழர்கள் தடம் பதித்த

செழிப்பான பூமி வன்னி

 

தேடாது இருந்த நிலத்தை

தேடிவந்தவர் விவசாயிகள் பலர்

 

வன்னியர்கள் என்றாலே விவசாயிகள்

வயல்களை நம்பி வாழும் உழைப்பாளிகள்.

 

காடு வெட்டி எரித்த சாம்பலில் 

கமம் செய்த வன்னி மக்கள் . 

 

அரசர்கள் கட்டிய குளங்கள் பல

அதன் பெயரால் வன்னியில் ஊர்கள் சில.

 

சுரண்டியவனை எதிர்த்தான் பண்டார வன்னியன்

சிங்களவனை வன்னியில் எதிர்த்தார்கள் ஈழத்து மாவீரர்கள்.

 

வங்கக் கடல் ஓரத்தில்,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆட்சி.

 

பெண் போராளிகள் தமிழ் இனம் காக்க

பயிற்ச்சி பெற்ற புனித பூமி.

 

முல்லைதீவின் முல்லை மலர் வாசனையோடு

முள்ளிவாய்க்காலில் பிண வாசனை.

 

அடங்காப்பற்றிலே அடக்கிய வன்னியர்கள்

அஞ்சாத நெஞ்சம் கொண்ட தமிழ் மறவர்கள்.

 

கிளிகள் பறக்கும்  கிளிநொச்சி

கண்ணுக்கு பசுமை நிறைந்த வயல்கள்.   

 

மழைக் கால ஆறுகள் சில

மனம் குளிர நிறப்பும் குளங்கள் பல.

 


நெஞ்கம் இல்லா இராணுவம் கவர்ந்த காணிகளிள்

நெற்கதிர்கள் பல பெயர்களில் விளைந்த வன்னி

 

ஆனைகள் கடந்த ஆனையிறவு ஏரி

அகதிகள் முடிச்சோடு நடந்த கிலாலி ஏரி

 

பூர்வீக குடிகள் நிலப் பரப்பு அடங்காபற்று

பூக்கள் பூத்த ஏரிக்கரை பூநகரி

 

கண்டி யாழ் பெரும் பாதை ஒரத்தில்

கணபதி நினைவாக முருகண்டி

 

வற்றாத குளங்கள் நிறைந்த

வன்னியின் தலைநகராம் வவுனியா

 

வன்னிக் காட்டில் பழங்கள் உண்டு

வளர்ந்த உயர்ந்த வேம்புகள் பல உண்டு

 

வன்னிக் குளங்களைத் தேடி வரும்

விருந்தினராய் பிற நாட்டு பறவைகள் பல.

 

வாருங்கள் ஈழத்து வன்னிக்கு

வந்து பாருங்கள் அதன் வரலாற்றுச் சிறப்பை.

 

– பொன் குலேந்திரன் (கனடா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More