கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் எம். பாண்டியன் நாயகனாகவும் ரசிகப்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன், எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். சார்லஸ்தனா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.
ஆனால் நடந்த கதையே வேறு ..தான் காதலித்த பெண் இறந்து விட்டாள் என்று தெரியாமல், அவள் உடலை எரித்து சாம்பலாக்கியது தான் தான் என்று அவன் புரிந்து கொண்ட போது அவன் என்ன மாதிரியான மன நிலைமைக்கு ஆளானான் என்பது கதை!
படப்பிடிப்பு முடிந்து “யு” சான்றிதழும் சென்சாரால் வழங்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.