மனிதர்களில் பெரும்பாலானோர் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று புகைப்படம் பிடித்துக் கொள்வதற்கு விரும்புவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பொம்மையை உலகின் பல்வேறு நகரங்களில் வைத்து படம்பிடித்துள்ளார்.
ஜெஸிகா ஜோன்சன் எனும் இப்பெண்ணுக்கு 3 வயதில் பொம்மை ஒன்று கிடைத்துள்ளது. ஆதன் பின் கடந்த 30 வருட காலத்தில் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்த பொம்மையையும் எடுத்துக்கொண்டு சென்றார். லண்டன், நியூயோர்க், பரிஸ், இத்தாலி, பாரிஸிலோனா, லாஸ் வேகாஸ் என பல்வேறு நகரங்களில் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் தனது பொம்மையை வைத்து படம் பிடித்துள்ளார் ஜெஸிகா.
மிஸ்டர் பொக்ஸ் என இந்த பொம்மை அழைக்கப்படுகிறது. உலகம் சுற்றும் இந்த பொம்மைக்காக இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லா இடங்களுக்கும் ஜெஸிகா பொம்மையை எடுத்துச் சென்று படம்பிடிப்பதை பலர் விசித்திரமாக பார்த்துள்ளனர்.