புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படை தளபதி, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் மூத்த அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை சமல் ராஜபக்ஷ விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.