குஜராத்தில் 19 வயது மதிக்கத்தக்க காஜல் என்ற பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தூக்கிலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 31ம் திகதி காணாமல் போயிருந்த குறித்த பெண் தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட்டு தொங்க விடப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸில் புகார் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் குறித்த புகாரை ஏற்க மறுத்திருந்தனர். இதற்கு தலித் அடையாளம் ஒரு தடையாக இருந்ததாக தெரிகிறது.
எனினும் அதன் பின்னர் மக்களின் எதிர்ப்பினைத் தொடர்ந்து புகாரினை ஏற்றுக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தமை தெரிய வந்ததையடுத்து அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தேக நபர்களை ஆந்திர காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.