இந்தியாவில் பலாத்காரத்திற்கு எதிரான மக்கள் என்ற தொண்டு நிறுவனம் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திற்கு குறித்த தொண்டு நிறுவனம் கடிதமொன்றையும் எழுதியுள்ளது.
குறித்த கடிதத்தில் “எதிர்வரும் 22ஆம் திகதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
இது நமது வரலாற்றில் நீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு சர்வதேச தரத்தில் உள்ளது என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் புரட்சிகரமான முடிவாக இருக்கும். இதனால் ஏற்படும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய மாற்றத்தை தூண்டுவதற்கு இந்திய ஊடகங்களி்ன் பங்கு பெரிய அளவில் பாராட்டப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் எவ்வித பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.