ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.