பிரிட்டனை தாக்கி வரும் டென்னிஸ் புயல் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததை அடுத்து வேல்ஸ் நருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேல்ஸ் நகரின் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆற்றுநீரின் மட்டம் அதிகரித்து, ஒரே இரவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. டென்னிஸ் புயலின் இந்த கோரத்தாண்டவத்திற்கு இதுவரை 238 எச்சரிக்கைகளை இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதற்கிடையே லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஐக்கிய அரபுற்கு சொந்தமான விமானம் ஒன்று, புயலின் தாக்கத்தினால் ஓடு பாதையை விட்டு விலகி பக்கவாட்டில் உள்ள தரைப்பகுதியில் சென்று நின்றது.