0
அமெரிக்கன் மிலேனியம் செலேன்ஞ் கோபரேஷன் எனும் எம்சிசி உடன்படிக்கையில் கைச்சாத்திடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வுடன்படிக்கை தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்ட புத்தி ஜீவிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.