தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல்.இதில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ் மற்றும் நயன்தாராவும் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்க்ள்.தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாராம்.
தனுஷ், அமலாபால் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான Wunderbar Films என்ற நிறுவனத்திற்காக தயாரிக்கின்றார். இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் நடனம் ஆடியுள்ளாராம். இந்த பாடலுக்கு தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகிய மூவருமே நடனம் ஆடி கலக்கியுள்ளனராம். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடந்தது.
மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளதால் இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளதாக நடன இயக்குனர் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நடனம் ஆட அனிருத், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.