கல்லிலும் தெய்வம் கண்டேன்
உன்னிலும் தெய்வம் கண்டேன்
உன்னிலில் கண்ட தெய்வம்
உயிருக்குள் நின்றதம்மா
உன்னிலே என்னைக்கண்டேன்
கல்லிலே உயிர்த்திருக்கும்
கடவுளாய் உன்னைக்கண்டேன்
கடவுளை விடவும் பெரிது
கருவிலே சுமந்த தெய்வம்
கண்ணுக்குள் மணியைப்போல
உன்னுக்குள் என்னை வைத்தாய்
உலகிலே உன்னை விட
உயர்ந்தது எதுகும் இல்லை
வானிலே நிலவு போல
என் வாழ்விலும் வெளிச்சம் தந்தாய்
கரை தனை வந்தணைக்கும்
கடலலை போல் உன் பாசம்
என் கையிலே வந்ததோர்
கனவென சொல்லி நின்றாய்
என்னதோர் பாசமென்று
எழுதவும் வார்த்தையில்லை
பா.உதயன்
Sent from my iPad