.
கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சியில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செய்துவருபவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர்த்திக்கு இன்று அகவை ஐம்பது.
கிளிநொச்சியில் பிறந்து அதே பிரதேசத்தில் கல்வி கற்று யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஈழத்தின் இதயபூமியான கிளிநொச்சியில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தனது வைத்திய தொழிலை அதே பிரதேசத்தில் ஆரம்பித்தார். யுத்தத்தின் நீட்சி பெரு வலி கண்டபோதும் மனம் தளராது தனது பணியை தாய மக்களுக்காக முள்ளிவாய்க்கால் வரை மேற்கொண்டார். அதனால் முள்ளிவாய்க்கால் வைத்தியர் என பின்னாட்களில் அழைக்கப்படுகின்றார்.
இவரது அற்பணிப்பான சேவைக்காக பல விருதுகள் இவரை தேடி பெருமை சேர்த்தன. கடந்த 2019ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு [ KILI PEOPLE ] இலண்டனில் நடைபெற்ற மாபெரும் ஒன்றுகூடலில் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கி கௌரவித்தது.
கிளிநொச்சி பிரதேசத்திலும் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பெரும் பணியாற்றிவரும் இவருக்கு வணக்கம் இலண்டன் இந்த சிறப்பு பதிவுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
2019ம் ஆண்டு இலண்டனில் “மண்ணின் மைந்தன்” விருதினை வழங்கியபோது KILI PEOPLE அமைப்பினால் ஒளிபரப்பிய காணொளியை மீண்டும் இங்கே பதிவிடப்படுகின்றது ..