கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் வீட்டு ஓய்வுக்குப் பின் நேற்று பணிக்குத் திரும்பினார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கொரோனா பொது இடங்களில் மக்களை தாக்கி கொள்ளையடிக்கும் கண்ணுக்குத் தெரியாத கொள்ளையனைப் போன்று செயல்படுவதாக தனது சொந்த அனுபவத்தில் இருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது அதிகபட்ச அபாயத் தருணம் என்ற அவர், அனைவரும் வீடுகளுக்குள் அடங்கி இருப்பதன் மூலம் ஒன்றுபட்டு கொரோனாவை வீழ்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக இருப்பதால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்படாது என்று கூறப்படுகிறது.