அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கறுப்பினக்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு இப் பெண்ணின் ஆதரவு வரவேற்கப்பட்டாலும் அவர் போர்த்தியிருக்கும் சிறிலங்கா கொடியும் தாங்கியிருக்கும் சுலோகமும் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பத்து வருடங்களின் முன்னர் இலங்கையில் சிறுபாண்மை இனத்துக்கு எதிராக அந்தநாடு என்ன செய்தது ? அன்று பெரும்பான்மை சிங்கள இனமக்கள் இவ்வாறு செயல்பட்டிருந்தால் ஒரு இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றியிருக்கலாம். ஒரு கறுப்பினதவரை அதுவும் போலி பணத்துக்காக கைது செய்தவரை அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் கொல்லப்பட்டதுக்கு இன்று இந்த பெண் குரல் கொடுக்கின்றார். அவரது அநீதிக்கு எதிரான குரலுக்காக வரவேற்கப்படத்தான் செய்கின்றார்.
பத்து வருடங்களின் முன்னர் இவர் சிறுமியாக இருந்திருப்பார் ஈழத்தமிழர் பிரச்சனையில் புரிதல் குறைவாகவும் இருந்திருப்பார். இவரைப்போன்றவர்கள் அன்று சிறிலங்காவில் பெரும்பான்மை இனத்தில் இருந்திருக்கலாமே.
செய்தியாளர் வர்மன்