தமிழகத்தில் மைனர் பெண்ணுக்கு நடந்த திருமணம் டிக் டாக் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும், பழனிசாமி என்பவருக்கும் கடந்த மாதம் 27 ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை அப்பகுதி இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் கணவர் பழனிசாமியை கைது செய்தனர்.
மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார் என தெரியவள்ளது.