இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெப்போதும் இல்லாதவாறு 34,956 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 687 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து, இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,03,832 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,602 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.