லெபனான் தலைநகரான பெய்ருட்டில் பயங்கர வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெய்ரூட் துறைமுகத்தில் ஹெஸ்பொல்லா ஆயுதக் கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை வெளியான தகவல்களின் படி, 15 நிமிட இடைவெளியில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, ஒன்று துறைமுகத்திலும் மற்றொன்று நகரத்திலும் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் இரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.
அதேவேளையில் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. உயிரிழப்பு, வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை.