செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர் இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர்

இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர் இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர்

3 minutes read

WTSF_poster finalpsd -2

எமது கலைஞர்களின் குறும்பட முயற்சிகளுக்கு என்றைக்குமே பக்கத்துணையாக இருப்பவை குறும்பட போட்டிகள். தொடக்க காலத்தில் இருந்தே போட்டிகளையும், விருதுகளையும் இலக்காக கொண்டு ஏராளமான படைப்புக்கள் எமது கலைஞர்களிடமிருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. போதியளவு ஊடக ஆதரவு இல்லை, எமது மக்களின் அங்கீகாரம் இல்லை போன்ற பிரச்சனைகளை எமது கலைஞர்கள் எதிர்நோக்கிய காலத்தில் எல்லாம், கலைஞர்களுக்கு கைகொடுத்தவை குறும்பட போட்டிகள்தான்.

இன்று உலகம் முழுவதிலும் குறும்பட போட்டிகள் நடந்தாலும், அவை அனைத்திலும் இருந்து வேறுபட்டதாக, ஒரு மாபெரும் குறும்பட போட்டி லண்டனில் நடைபெற இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் இக்குறும்பட போட்டியை நடத்துபவர்கள் முக்கியமானவர்கள். மூன்று ஊடகங்கள் ஒன்ரு சேர்ந்து இப்போட்டியினை நடத்துவது ஆரோக்கியமான ஒரு விஷயம் ஆகும்! வெற்றி வானொலி, வணக்கம் லண்டன்.கொம், க்ளவுட்ஸ் மீடியா ஆகிய மூன்று வெவேறு ஊடகங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த குறும்பட போட்டிக்கு, ஒரு பேப்பர் மற்றும் ஜீ டிவி ஆகியவை ஊடக பங்காளர்களாக இருப்பதும், இலங்கை கலைஞன், தமிழிதழ் ஆகிய இணையங்கள் ஊடக ஆதரவு வழங்கி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவோடு நடைபெறும் இந்த குறும்பட போட்டியானது இம்மாதம் 29 ம் திகதி லண்டனில் மாபெரும் விழாவாக நடைபெற உள்ளது. இப்போட்டியின் இன்னொரு முக்கிய அம்சம், இதன் பிரதான அனுசரணையாளர்களாக லெபேரா மொபைல் இருப்பது.  உண்மையில் இப்படியான பெரிய நிறுவனங்களின் ஆதரவு எமது கலைஞர்களுக்கு கிடைத்திருப்பது, வரவேற்க்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

இப்போட்டியின் நோக்கம் குறித்து வெற்றி வானொலியின் பணிப்பாளர் ஜேஜே அவர்களை தொடர்புகொண்டு வினவினோம். அவர் தெரிவித்த கருத்துக்கள்.

“இப்போட்டியானது எமது கலைஞர்களுக்கு மிகவும் பெறுமதி மிக்க ஒரு போட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் தான் பல ஊடகங்களை ஒன்றிணைத்து, லெபேரா போனற மிகப்பெரிய நிறுவத்தோடு கைகோர்த்து இப்போட்டியினை நடத்துகிறோம். உண்மையில் ஊடங்களிடையே கடும் போட்டி நிலவும் இக்காலகட்டதில் நாம் ஒன்று சேர்ந்து இப்போட்டியினை நடத்துவது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கலைஞர்கள், ஆர்வலர்கள் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.

மேலும், இப்போட்டிக்கு 50 வரையான குறும்படங்கள் இதுவரை கிடைத்துள்ளன. அவற்றில் இருந்து முதல் மூன்று சிறந்த படங்களை தெரிவு செய்ய இருக்கிறோம். அவற்றுக்கு முறையே 1000 பவுண்ட்ஸ், 500 பவுண்ட்ஸ், 300 பவுண்ட்ஸ் என பரிசுகள் வழங்க இருக்கிறோம். இதைதவிர மேலும் பல பிரிவுகளும் உள்ளன. மொத்தமாக 11 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் வெற்றியாளர்களுக்கு நினைவுக் கேடயம், சான்றிதழ் போன்றவையும் வழங்கப்பட உள்ளன.

நிகழ்வு மாலை 5 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை நடைபெறும். மாலை 5 மணிக்கு எமது கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பு நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளோம். இந்த நிகழ்வை க்ளவுட்ஸ் மீடியா நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இந்நிகழ்வுக்கு சிறப்பு நடுவர்களாக ஈழத்தமிழ் பிரபல இயக்குனர் லெனின் எம் சிவம் கலந்து கொள்ள இருக்கிறார். இவரும் தொடக்கத்தில் ஒரு குறும்பட இயக்குனராகவே இருந்தார். மேலும் தனது A Gun & A Ring படத்திலேயே அனைத்து தமிழ் மக்களினதும் மனங்களை வென்றிருக்கிறார். அதனால்தான் அவரை சிறப்பு நடுவராக அழைத்திருக்கிறோம். அத்துடன் பிரபல கவிஞர், நடிகர் ஜெயபாலன் அவர்களும் கலந்து கொள்கிறார். அவரை பற்றி எமது மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஆடுகளம் படத்தி ல்நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டவர். அத்துடன் பிரபல நடன கலைஞர் ஒருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறோம். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் வெற்றியீட்டியவர். இப்படியாக முன்னணி தென்னிந்திய கலைஞர்களுடன், நமது கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் மொத்தம் ஐந்து குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.  உண்மையில் எமது கலைஞர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரு விழாவாக இது இருக்கும்” என்று ஜேஜே தெரிவித்தார்.  இந்த “உலக தமிழ் குறும்பட போட்டி, எமது கலைஞர்களுக்கும், ஈழத்து சினிமா முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : ஒரு பேப்பர் | இலண்டன் 

WTSF_poster-120314

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More