அஞ்சலியை மீண்டும் காணவில்லை. அமெரிக்காவில் தனது தொழிலதிபர் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் திருமணம் செய்யப் போகிறார் என்று ஊடகங்கள் சமீபமாக செய்தி வெளியிட்டு வந்தன. இன்னும் சிலர், அமெரிக்காவில் இருக்கும் அஞ்சலி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். விரைவில் புதுப்பொலிவுடன் சினிமாவில் நடிப்பார் எனவும் பேசி வந்தனர்.
இந்த இரண்டு விடயங்களுமே அறுதியிட்டு சொன்ன ஒரு விஷயம்இ அஞ்சலியை காணவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் திடீர் பிரசன்னமான அஞ்சலி பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இயக்குனர் சொன்ன கதை பிடித்ததால் உடனே அப்படத்திற்கு கால்ஷீட் தந்ததாகவும் அந்த சந்திப்பின் போது கூறினார்.
ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.
ஷகிலாவின் சுயசரிதையில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கிறார் என்ற வதந்தி பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த செய்தியை அவர் மறுத்தார். ஷகிலாவாக நான் நடிக்கவில்லை, ஒருபோதும் நடிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் மூலம், ஷகிலா படத்தில் நடிக்கிறார், அஞ்சலியை காணவில்லை என்ற இரண்டு வதந்திகளுக்கும் அஞ்சலி முற்றுப்புள்ளி வைத்தார்.