உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட Barclays என்ற வங்கியின் லண்டன் கிளையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலி வங்கிக்கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் 2 மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்துள்ளார். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் மோசடி செய்த பணத்தின் பெரும்பகுதியை பாலியல் தொழிலாளி பெண்களுக்காக அவர் செலவழித்துவிட்டாரம்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள Barclays வங்கி கிளையில் 45 வயதாகும் John Skermer என்ற வங்கி ஊழியர் பணிபுரிந்து வந்தார். இவர் தான் பணியில் இருக்கும்போது பினாமி ஒருவரின் பெயரில் போலி வங்கிக்கணக்கு ஆரம்பித்து அதில் மற்ற வாடிக்கையாளர்கள் போடும் பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டிரான்ஸ்பர் செய்துள்ளார். ஐந்து வருடங்களாக இவர் நடத்தி வந்த இந்த மோசடி மூலம் சுமார் இரண்டு மில்லியன் இங்கிலாந்து பவுண்ட்கள் இதுவரை மோசடி செய்திருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகார் வந்ததும் லண்டன் போலீஸார் John Skermerஐ கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் தான் செய்த மோசடியை ஒப்புக்கொண்டார். ஆனால் தான் மோசடி செய்த பணத்தின் பெரும்பகுதியை பாலியல் தொழிலாளி பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக செலவு செய்துவிட்டதாக கூறினார். தாய்லாந்து பாலியல் தொழிலாளி பெண் ஒருவருக்காக மட்டுமே ஒரு மில்லியன் பவுண்டுகள் செலவழித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றத்தை இவர் ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் இவருக்கு 7 வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு அளித்துள்ளது.