தாயக நிலங்களில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் நடும் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலய திடலில் சுமார் பனம் விதைகள் நடுகை ஆரம்பமானது. சுமார் ஐயாயிரம் பனம் விதைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இயற்கையின் சமநிலையை பேணவும், நிலத்தடி நீரினை பாதுகாக்கவும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரங்களை உருவாக்குவது இன்றைய காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த வகையில் கிளி மக்கள் அமைப்பும், கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையும் இணைந்து சுமார் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் நடும் திட்டத்தை முன்னெடுத்துள்ள.
கரைத்துறைபற்று இளைஞர் சம்மேளனம் மற்றும் முல்லைத்தீவு செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து இன்றைய நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தன. முல்லை மாவட்ட அரச அதிபர் க விமலநாதன், யாழ் வைத்தியாசாலை பணிப்பாளரும் கிளி சமூக அபிவிருத்தி பேரவை செயற்பாட்டாளருமான வைத்தியர் சத்தியமூர்த்தி, மேலதிக அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன், மாவட்ட சுகாதார அதிகாரி வைத்தியர் ஸ்ரீராமன், இளைஞர் சேவைகள் மன்ற பிரதி பணிப்பாளர் சரோஜா குகணேசதாசன், கரைத்துறைப்பற்று பிரதேசசபை உதவி தவிசாளர் இரவீந்திரன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பிரதம குருக்கள், ஓய்வுநிலை பிரதிக்கல்விவிப் பணிப்பாளர் செ சிவராஜா, முல்லை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், அம்மன் ஆலய நிர்வாகத்தினர், பிரதேசசபை உறுப்பினர்கள், வற்றாப்பளை கிராம சேவையாளர், கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பனம் மரத்தின் சிறப்பு மற்றும் தேவைகள் பற்றியும் இத்திட்டத்தின் நோக்கம் பற்றி கருத்துக்கள் பகிர்ந்துகொண்டதுடன். கலந்துகொண்டவர்களுக்கு மோதகமும் சுடச்சுட பால் காச்சியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை வைத்தியர் ஜெகஜீவன் ஒழுங்குபடுத்தியிருந்தார்.