செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக Rahul Sood இணைவு

Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக Rahul Sood இணைவு

1 minutes read

Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood, Lanka Premier League (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஓருவராக இணைந்துள்ளார்.

Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப் பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றுவார்.
“Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என்றார் Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட்.

“உலகின் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக கிரிக்கெட் திகழ்கிறது. IPL போட்டிகளிற்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளார்கள். ஆதலால் இலங்கையில் LPL போட்டிகள் ஆரம்பமாவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது, LPLன் ஆரம்பமானது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஓரு முக்கியமான நிகழ்வு” என்றார் Rahul Sood.

“LPL போட்டிகளில் பங்கேற்கும் Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக இணைவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்” என்று Rahul Sood மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More