முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கூட்டுறவு பால் பண்ணையில்
சனிக்கிழமை 28/11/2020 காலை 9 மணிக்கு பண்ணை வேலியோரம் 2000 பனம் விதைகள் நடப்பட்டன.
முல்லைத்தீவு சி. க. கூ சங்க சமாச நிர்வாக உறுப்பினர் ந. சிவதாசன் தலைமையில் கற்பகா திட்டம் – 11 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் யாழ் வைத்தியாசாலை பணிப்பாளர் Dr. சத்தியமூர்த்தி., புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை அத்தியட்சகர் Dr. தயானாந்தரூபன்,
புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்ரமணிய வித்தியாலய அதிபர் திரு. அமிர்தநாதன்,
சி. க. கூ மாவட்ட செயலாளர், வடமாகாண சி. க. கூ சங்கங்களின் சம்மேளனத்தின் இணைப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வன வள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், சி. க. கூ சங்க உறுப்பினர்கள், மற்றும் கற்பகா திட்டத்தை தாயகத்தில் ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துகொண்ட அனைவருக்கும் சத்து உணவு உருண்டை மற்றும் பசு பால் காலை உணவாக வாழங்கப்பட்டன.
நெதர்லாந்தை தளமாக கொண்ட நெதர்லாந்து மனிதாபிமான நடவடிக்கைக்கான கூட்டுறவு அமைப்பு மல்லிகைத்தீவில் உள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தில் பால் பண்ணை அமைப்பதனூடாக பலருக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்த உள்ளனர். இப்பண்ணையை சுற்றி பனம் விதை நடும் முயற்சி கிளி பீப்பிள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுள்ளது.
இந்த நிகழ்வினை பண்ணையின் வைத்திய ஆலோசகரும் கிளி பீப்பிள் அமைப்பின் முல்லைத்தீவு செயற்பாட்டாளருமான வைத்தியர் ஜெகஜீவன் ஒழுங்கு செய்திருந்தார்.