உன் வருகையால்,
நீண்டகால ஏக்கம்
நிமிடத்தில் பறந்ததே ……..
உன் சிரிப்பால்,
மனமெல்லாம் நெகிழ்ந்து
மகிழ்ச்சி பரவியதே ……..
உன் அழுகையால்,
தாங்காது மனமுடைந்து
தத்தளித்து தவிக்குதே ……..
உன் மழலையால்,
கேட்கும் ஓசையெல்லாம்
தேனாய் காதில் பாயுதே ……..
உன் பார்வையால்,
துன்பம் துயரமெல்லாம்
தூரமாய் போனதே ……..
உன் அணைப்பால்,
உடல் சிலிர்த்து
உலகமே மறக்குதே ……..
என் வாழ்வுக்கு
அர்த்தம் தந்தவனே ……..
அப்பா ஸ்தானத்தில்
என்னை அமரவைத்தவனே ……..
அழகன் முருகனாய்
என் இல்லம் வந்தவனே ……..
உனக்காக …….. என் மகனுக்காக ……..
நான் சொல்வேன்
ஆண்டவனே உனக்கு
கோடி நன்றிகள்.
– விமல் பரம் –