உங்கள் சுவையை தூண்டும் காலிஃப்ளவர் வறை சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிஃப்ளவர் வறை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
காலிஃப்ளவர் – 1
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 தேக்கரண்டிq
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – சிறிதளவு
உணவு செய்முறை : காலிஃப்ளவர் வறை
Step 1.முதலில் ஒரு பாத்திரத்தில் மெல்லிய சுடுநீர் எடுத்து, அதில் உப்பு போட்டு கலக்கி காலிஃப்ளவரை ஒவ்வொரு பூவாக எடுத்துப் போடவேண்டும் . பிறகு அரை மணி நேரத்திற்கு பின்பு தண்ணீரில் இருந்து எடுக்கவேண்டும் .
Step 3.பின்பு ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு வதக்குங்கள்.
Step 4.பின்னர் வெங்காயம் வதங்கியதும் மிளகாயையும், கறிவேப்பிலையும் கிள்ளிப் போடவும்.துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேக விடவும்.3 நிமிடத்தின்
Step 5.பின்பு மூடியை திறந்து மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து கிளறி திரும்பவும் மூடிவிடவும்.காலிஃப்ளவர் வெந்து தண்ணீர் வற்றியதும் ஒருமுறை கிளறி இறக்கவும்.இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி : அறுசுவை சமையல்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW