செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது

இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது இந்திய மக்களவை தேர்தல் தமிழகத்தில் வாக்குபதிவு தொடங்கியது

1 minutes read

voting-india-e1396611364405

தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி, உ.பி., பீகார், ராஜஸ்தான், அசாம், மகாராஷ்ட்டிரா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், காஷ்மீர் என மொத்தம் 117 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை ( 24 ம்தேதி வியாழக்கிழமை) 7 மணிக்கு துவங்கியது. காலை 11 மணிநிலவரப்படி 35 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியது. தர்மபுரி , நாகை, கிருஷ்ணகிரி, ஈரோடு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு படு வேகமாக நடந்து வருகிறது. நாகை மீனவ பகுதிகளில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஓட்டுக்கள் பதிவாகியது. தமிழகத்தில் மாலைக்குள் 70 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 9 கட்டங்களாக நடக்கும் தேர்லில் இன்று நடக்கவிருப்பது 6ம் கட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையாற்றினர். மக்கள் ஆர்வமாக ஓட்டு போட்டு வருகின்றனர். சென்னையில் நடிகர்கள் ரஜினி, கமல், கவுதமி, அஜீத், ஷாலினி , பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுக்களை அவரவர் ஓட்டு சாவடிகளில் போட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More