செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் நடிகையின் பிறந்த நாள் | இயக்குநர் வழங்கிய பரிசு!

நடிகையின் பிறந்த நாள் | இயக்குநர் வழங்கிய பரிசு!

1 minutes read
நடிகையின் பிறந்த நாள் – இயக்குநர் வழங்கிய பரிசு!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக பிசாசு 2 போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மிஷ்கின். ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். இசை – கார்த்திக் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கான பிறந்த நாள் பரிசாக ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் பிசாசு 2 போஸ்டரை வெளியிட்டுள்ளார் மிஷ்கின்.

Happy birthday and wishing you a long creative life says Mysskin pisasu2-  Dinamani

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More